விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (10:41 IST)
பிரபுசாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு தற்போது பொன்னியின் செல்வன் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ’பகையை காத்திரு’.
 
இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிவேல் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ராசி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தயாரிக்கிறார்
 
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் விக்ரம் பிரபுவின் வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்