இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு யார் ஜோடி தெரியுமா?

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (21:34 IST)
‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்கிறார்கள்.

 
நயன்தாரா சினிமாவில் நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். அவர் ஜோடிசேராத ஒரே ஒருவர் கமல்ஹாசன் மட்டுமே.
 
இந்நிலையில், ஷங்கர் இயக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. ரஜினியின் ‘2.0’ ரிலீஸுக்காக காத்திருக்கும் ஷங்கர், அது முடிந்ததும் ‘இந்தியன் 2’ படத்தைத் தொடங்குகிறார். இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்