ஓவியாவின் உளவியல் பிரச்சனை ஒரு அலசல்: காரணம் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (12:00 IST)
பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஓவியாவின் நடவடிக்கைகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சிப்படையை சேர்ந்தவர்களை தவிர்த்து ஓவியாவை ரசித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பொதுவான நேயர்களுக்கு நிச்சயம் ஓவியாவின் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும்.


 
 
ஆனால் ஓவியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னணியில் அவருக்கு உளவியல் ரீதியாக உள்ள பிரச்சனை தான் உள்ளதாக பலரால் கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆரவ், ஓவியா இருவரும் காதலர்கள் மாதிரி நெருங்கி பழகுவது அனைவருக்கும் தெரிந்ததே.
 
ஓவியாவிடம் காதலர் போல் ஆரவ் பழகினாலும் தன்னுடைய வார்த்தைகளில் உஷாராக இருக்கிறார். ஆனால் அவரது உடல் மொழி அப்படியில்லை. வாய் மொழியில் காதல் இல்லாமலும் உடல் மொழியில் காதலனை போல ஆரவ் செயல்பட்டது தான் இந்த பிரச்சனையின் மையப்புள்ளி.
 
சில நேரங்களில் நெருக்கமாக இருக்கும் ஆரவ், சில நேரங்களில் விலகி நடக்க ஆரம்பிக்கிறார். இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பிக் பாஸ்ஸுக்கு தான் வெளிச்சம். நெருக்கமாக இருந்த ஆரவ் திடீரென விலக ஆரம்பித்தது ஓவியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இங்கு தான் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாகத்தான் ஓவியா இவ்வாறு நடந்துகொள்கிறார். இது தான் ஓவியாவின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு காரணம்.
 
அதென்ன ஆரவ் மீது ஓவியாவுக்கு அப்படி ஒரு நெருக்கம் என கேட்கலாம். வீட்டில் இத்தனை பேர் இருக்கும் போது ஆரவ் ஏன் ஓவியாவிடம் நெருக்கம் கட்ட வேண்டும் என்பது தான் இதற்கு பதில். காரணம் அதுதான் ஆரவுக்கும் ஓவியா மீது ஏற்பட்ட ஈர்ப்பு. ஆரவ் போய் ஜூலியோடு ரொமான்ஸாக பேசிட்டு இருக்க வேண்டியது தானே, ஏன் ஓவியாவுடன் ஒன்றாக கொஞ்சி குலாவினார்.
 
காரணம் ஓவியாவுக்கு ஆரவ் தேவைப்பாட்டாரோ இலையே ஆனால் ஆரவுக்கு ஓவியா தேவைப்பட்டார். ஆனால் அதனை ஆரவ் ரகசியமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் அதுவும் இங்கு ஒரு பிரச்சனை தான். மற்றவர்கள் தப்பா நினைக்கிறார்கள் என்பதும் ஆரவின் ஒரு புலம்பல். ஆரவ் மற்றவர்களுக்காக நடிக்கிறார். ஓவியா தனக்காக உண்மையாக இருந்து கெட்ட பெயர் வாங்குகிறார். இங்கு யார் நியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
 
வீட்டில் உள்ள அத்தனை பேரும் வெறுத்து ஒதுக்கிய போது ஆரவ் தனக்கு ஆறுதலாக இருக்கிறான் என நம்பினார் ஓவியா. அந்த நம்பிக்கை தான் ஆரவ் மீது ஓவியா கொண்ட காதல். ஆனால் ஆரவ் ஓவியா இல்லாத நேரங்களில் ஓவியாவுக்கு எதிராக மற்றவர்கள் பேசிய போது அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இருந்தது ஓவியாவுக்கு தெரியாது. ஆரவ் நடித்துக்கொண்டு இருந்தது எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருந்த ஓவியாவுக்கு தெரியவில்லை.
 
சுருக்கமாக மனதில் நிறுத்திய ஒருவர் தன்னை விட்டு விலகி போவதை ஏற்றுக்கொள்ள முடியாத மனம் என்ன செய்யுமோ அதனை ஓவியா தன்னுடைய குணாதிசியங்களுடன் செய்கிறார் தற்போது எனலாம்.
அடுத்த கட்டுரையில்