சென்னையில் மட்டும் தீரன் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (13:18 IST)
எச்.வினோத் இயக்கத்தில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அனைவரது பாராட்டைப் பெற்ற படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
காவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதை என்பதால்தான் இந்தப்படம் வெற்றிப் படமாக அமைய  முடிந்தது. இந்தப் படத்தை பார்த்து விட்டு காவல் அதிகாரிகள் பலரும் பாராட்டினார்கள். முக்கியமாக அந்த வழக்கில்  சம்பந்தபட்ட ஒரு உயரதிகாரி படம் பார்க்கும் போது மிக நெகிழ்ச்சியாக இருந்தது என படக்குழுவினர் அனைவருக்கும்  பாராட்டுகள் என்று கூறியிருந்தார்.
 
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத்  தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கார்த்தி நடிப்பில் தீரன் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் 1995-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
 
இப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. முதல் மூன்று நாட்களிலேயே இப்படம் தமிழகத்தில்  நல்ல வசூல் செய்தது. சென்னையில் மட்டும் ரூ. 5 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாம். ஏற்கனவே படம் ஹிட் என்று அறிவிக்க, இன்னும் இரண்டு வாரங்களுக்கு பெரிய படங்கள் ஏதும் வராத நிலையில், தீரன் சூப்பர் ஹிட் என்ற வரிசையில்  இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்