ஆன்லைன் மோசடியில் சிக்கிய சன்னி லியோன்! – ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (09:08 IST)
பிரபல இந்தி நடிகையான சன்னி லியோன் பெயரில் மர்ம நபர் ஆன்லைன் மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப, இணைய வசதிகள் அதிகரித்து விட்ட நிலையில் ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. சாதாரண மக்கள் வரை விஐபிகள் வரை இந்த ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல இந்தி நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் முன்னதாக பதிவிட்டிருந்த அவர் “சில முட்டாள்கள் என் பான் கார்டு எண்ணை பயன்படுத்தி ரூ. 2000 கடன் பெற்றுள்ளனர். இதனால் எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதோடு, சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில், எந்த உதவியும் ஏன் செய்யவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனை அவரது ரசிகர்களும் தீவிரமாக வைரலாக்கி வந்தனர். பின்னர் அந்த பதிவை நீக்கி புதிய பதிவிட்டுள்ள சன்னி லியோன், அந்த பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும், நடிவடிக்கை எடுத்த நிறுவனத்திற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்