திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

Siva
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (11:24 IST)
2024 பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் தென் கொரிய வீராங்கனை கிம் யே-ஜி பதக்கம் வென்ற நிலையில் தற்போது அவர் நடிகையாகியுள்ளார்.

இவர், "க்ரஷ்" என்ற சர்வதேச தொடரில் கொலையாளியாக நடிக்கவுள்ளார்.  இந்த தொடரில் கிம்முடன் இணைந்து நடிப்பவர், இந்திய தொலைக்காட்சி நடிகை அனுஷ்கா சென். "கிம்-அனுஷ்கா கொலைகார இரட்டையர்களாக சக்கைப்போடு போடுவார்கள்" என்று "க்ரஷ்" தொடரின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு கோடி ஃபாலோயர்களை வைத்துள்ள கிம் இதுகுறித்து கூறியபோது, ‘"எனது முக்கிய குறிக்கோள் ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் பதக்கம் பெறுவது தான். படப்பிடிப்பு ஒரு புறம் நடந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப், இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொள்வேன்.

மேலும் நான்கு ஆண்டுகள் கழித்து நடைபெறும்  லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து முன்னேறி, புதிய உயரத்தை அடைய விரும்புகிறேன்" என்று கூறினார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்