புஷ்பா 2 பாடலுக்கு ஆடப்போகும் அனிமல் பட நடிகை!

vinoth

வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (10:03 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது.

புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா மற்றும் அல்லு அர்ஜுன் நடனமாடிய ‘ஊ சொலிறியா மாமா” பாடல் வைரல் ஹிட்டானது. அதே போல இரண்டாம் பாகத்திலும் ஒரு கவர்ச்சிப் பாடல் இடம்பெற உள்ளதாகவும், அந்த பாடலில் நடனமாட பாலிவுட் நடிகர் திரிப்தி டிம்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இவர் அனிமல் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்