''ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து“ - இயக்குனர் செல்வராகவன் டுவீட்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (20:08 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில், என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் ஐயோ அம்மா கடவுளே காப்பாத்துதான் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனருமான செல்வராகவன் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம், புதுப்பேட்டை, என்.ஜி.கே,  உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், வெளியான  நானே வருவேன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து,  மோகன் ஜி இயக்கத்தில்,  செல்வராகவன் பகாசூரன என்ற படத்தில் பிரதான கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியானது.

ALSO READ: செல்வராகவனின் ‘பகாசூரன்’ டிரைலர் வெளியீடு!
 
இந்த நிலையில், அவ்வப்போது தன் டுவிட்டர் பக்கத்தில், டிவீட் பதிவிடும் செல்வராகவன், இன்று, எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் “ ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து“ தான் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்