’விக்ரம் 63’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர் யார் தெரியுமா?

Mahendran
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (11:03 IST)
விக்ரம் நடிக்க இருக்கும் 63வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனர் பெயரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், தற்போது அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சாந்தி டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் விக்ரம் 63வது படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே யோகி பாபு நடித்த மண்டேலா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய நிலையில், இவரது மூன்றாவது படம் தான் விக்ரம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும், படப்பிடிப்பும் மிக விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.



தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்