திருமணம் ஆன நபரைக் காதலித்தது ஏன்?... நயன்தாரா அளித்த பதில்!

vinoth

வெள்ளி, 13 டிசம்பர் 2024 (08:47 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக லேடி சூப்பர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். மலையாள படமான மனசினகரே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா அதன் பின்னர் தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியான அவர் அதன் பின்னர் முன்னணி நடிகையாகி முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடித்தார். அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கி புகழ் வெளிச்சத்தில் இருந்த நயன்தாராவுக்கு வெற்றிப் படங்களும் தொடர்ந்து அமைந்தன.

இந்நிலையில் திருமணம் ஆகி குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் திருமணம் ஆன ஒரு நபரை காதலித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் “சினிமா இண்டஸ்ட்ரியில் நிறைய இரண்டாம் திருமணங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களை எல்லாம் நான் தவறு என்று சொல்லவில்லை.  இண்டஸ்ட்ரி அப்படிதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் இப்படியான உறவுகள் எல்லாம் சரியானதுதான் என்பதுதான் என்னுடைய அப்போதைய நிலைப்பாடாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆன பிரபுதேவாவை அவர் காதலித்ததும் அவர் மனைவியிடம் இருந்து அவரை விவாகரத்து பெற வைத்ததும் சர்ச்சைகளைக் கிளப்பின. நயன்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்புகளோடு இணைந்து பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்