பெரிய ஹீரோக்கள் என்றாலே பதறும் தயாரிப்பு நிறுவனங்கள்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (17:54 IST)
தங்களிடம் கதைசொல்ல வரும் இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களின் பெயரைச் சொன்னாலே தயாரிப்பாளர்கள் பதறுகிறார்கள்.



 
பெரிய ஹீரோக்களை வைத்துப் படமெடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என தயாரிப்பாளர்கள் நினைத்தது ஒரு காலம். ஆனால், அவர்களின் ஆசையில் அவ்வப்போது மண் விழ, ‘இனிமேல் பெரிய ஹீரோக்களே வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் அடிபட்ட தயாரிப்பாளர்கள். தல நடிகரை வைத்துப் பல கோடி செலவில் படமெடுத்த அந்த பழம்பெரும் நிறுவனத்துக்கு, ஏகப்பட்ட கோடி நஷ்டம். நடிகரும் அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. அதில் சிக்கியது என்னவோ இயக்குநர்தான். சம்பளப் பாக்கியைக் கொடுக்காமல் டாட்டா காட்டிவிட்டது தயாரிப்பு நிறுவனம்.

இன்னொரு பக்கம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் தளபதி படத்தின் பட்ஜெட், அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. தேவையில்லாமல் செலவை இழுத்துவிட்ட இயக்குநர் மீது ஏகப்பட்ட கோபத்தில் இருக்கிறாராம் தயாரிப்பாளர். இனிமேல் இந்த அளவுக்கு பெரிய ஹீரோ வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம் அந்த நிறுவனம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்