வாடிவாசல் படத்தில் எந்த மாற்றமும் இருக்காது என வெற்றிமாறன் தரப்பு விளக்கம்… லேட்டஸ்ட் அப்டேட்

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (14:37 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அமீர் மற்றும் சூர்யாவுக்கு இடையில் பருத்தி வீரன் சமயத்தில் இருந்து ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அமீரை இந்த படத்தில் இருந்து வெளியேற்ற சூர்யா மறைமுக வேலைகள் செய்துகொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அமீர் நடிக்க வேண்டும் என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் சூர்யா விலகலாம் என வதந்திகள் பரவின.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி வாடிவாசல் படத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடங்கும் என சொல்லப்படுகிறது. வாடிவாசல் படத்துக்காக சூர்யா கடின உழைப்பை செலுத்தியுள்ளார். அதனால் அவர் இல்லாமல் வாடிவாசல் படம் தொடங்கப்படாது என வெற்றிமாறன் தரப்பு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்