’’விஜய் -65’’ படத்தின் புதிய சூப்பர அப்டேட்...ரசிகர்கள் கொண்டாட்டம் !

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (23:46 IST)
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படம்ன் குறித்தா ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனரான நெல்சன்தான் அந்த படத்தின் இயக்குனராக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில்,விஜய் மற்றும்  சன்பிக்சர்ஸ் இதை உறுதி செய்துவிட்டனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ். அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை சந்தித்து பேசுகின்றனர். இந்த படத்துக்கான மோஷன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், மார்ச் மாதத்தில் தொடங்கு இப்படப்பிடிப்புக மூன்று கட்டமாகத் தொடர்ந்து நடத்தி அடுத்தாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்