2020 ஆண்டில் முக்கிய நிகழ்வுகள் !’’உம்பன் புயல், நிவர் புயல் !’’

திங்கள், 14 டிசம்பர் 2020 (20:16 IST)
நடப்பு 2020 ஆம் ஆண்டில் நாம் மறக்க முடியாத பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் உம்பன் புயலும், நிவர் புயலும் குறிப்பிடத்தக்கக்வை. இவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

உம்பன் சூப்பர் புயல்:

வங்கக்கடலில் உருவான உம்பல் புயலானது மணிக்கு 190 கிமீ வேகத்தில் பலத்தக் காற்றுடன் வீசியது. இதனால் மேற்கு வங்கம்ம் ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் கடும்சேதம் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இங்கு வசிக்கும் மக்கள் 5 லட்சம் பேரும், ஒடிஷாவிலிருந்து 1.68 பேரும் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேற்கு வங்கம் மாநிலத்தில் பல்லாயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டதாக அம்மாநில முதல்வர் மற்றும் திரிணாமுள் காங்கிரஸ் தலைவர் மம்தான் பானர்ஜி கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.
 

நிவர் புயல்

நவம்பர் மாதம் 24 ஆம் தேதி சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம்கொண்டுள்ளதாகவும், இப்புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே வரும் 25 ஆம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.   இதனால் காற்று 100 முதல் 120 கி.மீ வேகத்தில் பயங்கர சீற்றத்துடன் வீசும் என எச்சரிகை விடுக்கப்பட்டது.

இப்புயல் சீற்றத்தால் மீனவர்களின் படகுகள், அவர்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது, அதேபோல், தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட  8 மாவட்டங்களில் கடும் புயல்பாதிப்பு இருந்தது. இதனால் ஏற்கனவே இருந்தவடகிழக்குப் பருவமழை பரவலாக இருந்தநிலையில் புயலுடன் இணைந்து விவசாய நிலங்களும் பயிர்களும் கடுமையாகச் சேதமடைந்தன. இந்தப் பாதிப்பிற்கு விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், நிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க, அரசு பொதுவிடுமுறை  அளித்தது குறிப்பிடத்தக்கது.3

சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்