ராதிகா ஆப்தேவை புறக்கணிப்போம்!?; திடீர் ட்ரெண்டிங்! – காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:16 IST)
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்தவர். இந்தியில் பார்ச்ட் உள்ளிட்ட பரிச்சார்ந்த கலை படங்களில் இவர் நடித்துள்ள நிலையில் இவரது படங்கள் தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியிருந்தாலும், பதிவுகளில் பெரும்பாலும் மொத்த பாலிவுட் திரையுலகையே தவிர்க்க வேண்டும் என்றே பலரும் கருத்து கூறி வருகின்றனர். பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து இந்து மதத்தை விமர்சிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்று அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்