தீபாவளி ரிலீஸில் இருந்து விலகிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (12:51 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, தீபாவளி ரிலீஸில் இருந்து விலகியுள்ளது.


 

 
சுசீந்திரன் இயக்கத்தில் சுந்தீப் கிஷண் நடித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இந்தப் படத்தில் மெஹ்ரின் ஹீரோயினாக நடித்துள்ளார். விக்ராந்த், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜய்யின் ‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸ் என்பதால், ஏகப்பட்ட தியேட்டர்கள் அந்தப் படத்துக்கே புக்காகி விட்டன. எனவே, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை நவம்பர் 3ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்