அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் ஒப்பந்தம் ஆகும் நடிகை நீது சந்திரா!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (15:26 IST)
தமிழில் யாவரும் நலம், யுத்தம் செய், தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நீத்துசந்திரா. ஆனால் அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் “என்னிடம் பணமோ, வாய்ப்புகளோ இப்போது இல்லை. முன்னணி இயக்குனர் ஒருவர் என்னை ஆடிஷனுக்கு அழைத்து நிராகரித்துவிட்டார். ஒரு தொழிலதிபர் என்னிடம் மாதம் 25 லட்சம் தருகிறேன். எனக்கு மனைவியாக இருக்கிறாயா என்று கேட்டார். அவர் அப்படி கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பல முறை தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தது” என கூறி பரபரப்பைக் கிளப்பி இருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் நெவர் பேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். மேலும் அடுத்து இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்