இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு கலக்கு கலக்கியது. இந்த படம் எவ்வளவு பிரபலமானது என்றால் படத்தின் ஒரு பாடலில் கோபிகா அணியும் சேலையை ஆட்டோகிராப் சேலை என்று சொல்லி தமிழகத்தில் உள்ள ஜவுளிக்கடைகள் விற்கும் அளவுக்கு.
இந்த படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் பாண்டிராஜ் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் “சேரன் சார் ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் பார்த்துவிட்டு இதுபோல ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி படமாக எடுக்க வேண்டும் என சொன்னார்.
அந்த படத்தை அவரே பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு தயாரித்தார். அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாவிட்டால், இரண்டு பாகங்களாக விஜய் டிவிக்கு விற்றுவிடலாம் என்ற யோசனையில் அதை எடுத்துவந்தார். அதற்காக சில காட்சிகளை நீளமாகவும் ஷூட் பண்ணினார்” எனக் கூறியுள்ளார்.