இந்த சிரிப்பழகை நாள் முழுக்க ரசிக்கலாம்... குட்டி பாப்பாவாக நஸ்ரியா - வைரல் போட்டோ!

Webdunia
வியாழன், 28 மே 2020 (17:20 IST)
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து உச்ச நடிகைகளாகவும் இளைஞர்களின் கனவுகன்னியாகவும் வலம் வந்த நயன்தாரா, அமலா பால், சாய்பல்லவி போன்றவர்களை தொடர்ந்து முக்கிய இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா.

தமிழில் நேரம் , ராஜா ராணி போன்ற படங்களில் கியூட்டான எஸ்பிரேஷன்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். இதற்கிடையில் மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் நஸ்ரியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் குழந்தையாக சிரித்துக்கொண்டிருக்கும் செம கியூட் போட்டோ ஒன்றை பகிர்ந்து அனைவரையும் ஈர்த்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்