இயக்குனர் விஜய் தயாரிப்பில் நஸ்ரியா நடிப்பில் உருவாகும் புதிய வெப் சீரிஸ்!

vinoth
சனி, 3 பிப்ரவரி 2024 (15:23 IST)
தமிழிலும் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை நஸ்ரியா அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார்.  இதையடுத்து அவர் 2014 ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து பஹத் பாசிலோடு ‘ட்ரான்ஸ்’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். சமீபத்தில் நானியுடன் அவர் நடித்துள்ள ‘அடடே சுந்தரா’ படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் தமிழ் படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளாராம். இந்த வெப் சீரிஸ் பெரும்பாலான ஷூட்டிங் முழுக்க முழுக்க சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த சீரிஸின் டைட்டில் மற்றும் மற்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்