சிவகார்த்திகேயன் படத்துக்கு 3 டைட்டில்… கமல் தேர்வு செய்வதே பைனல்!

vinoth
சனி, 3 பிப்ரவரி 2024 (15:17 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் நடந்ததால் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் மற்றும் டைட்டில் பிப்ரவரி 17 ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மூன்று டைட்டில்களை வைத்துள்ளதாகவும், அதில் கமல் தெரிவு செய்யும் ஒரு டைட்டில்தான் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்