நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

vinoth
செவ்வாய், 7 மே 2024 (15:07 IST)
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன அன்னபூரணி படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் நயன்தாரா இப்போது நிவின் பாலியுடன் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்கிறார். டியர் ஸ்டுடண்ட்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து  இயக்குகின்றனர்.

இந்த படத்தை நிவின் பாலியோடு இணைந்து விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் பள்ளிக்கூடத்தை மையப்படுத்திய ஒரு கதைக்களமாக உருவாகிறதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை இணையத்தில் படக்குழு பகிர, அவை வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்