பெயர் மாறுகிறதா நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம்?

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (14:07 IST)
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில்  நயன்தாரா 75 என்ற அறிவிப்போடு ஒரு படம் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று இப்போது மொத்த ஷூட்டிங்கும் முடிந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். படம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு வைக்கப்பட்டுள்ள அன்னபூரணி என்ற பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அதே பெயரில் ஒரு படம் உருவாகி ரிலீஸுக்குக் காத்திருக்கிறதாம். இதனால் இப்போது இந்த படத்துக்கு பொருத்தமான தலைப்பு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்