மீண்டும் நடிக்க வருகிறார் நமிதா

Webdunia
திங்கள், 21 மே 2018 (11:06 IST)
திருமணத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத நமிதா, தற்போது ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். 
பன்முகத் திறமைகள் கொண்ட டி.ராஜேந்தர் இயக்கிய கடைசிப் படம் ‘வீராசாமி’. டி.ராஜேந்தரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், மும்தாஜ் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு எந்தப் படத்தையும் இயக்காத, எந்தப் படத்திலும் நடிக்காத டி.ஆர்., கடந்த வருடம் வெளியான ‘கவண்’ படத்தில் முக்கிய வேடத்தில்  நடித்தார்.
 
இந்நிலையில், 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க இருக்கிறார். அரசியலை நையாண்டி செய்து எடுக்கப்பட இருக்கும் இந்தப் படத்தை, அவரே இயக்கி, தயாரிக்கிறார். ஹீரோ – ஹீரோயினாக புதுமுகங்கள் நடிக்க, டி.ஆர்., ராதாரவி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில், வில்லியாக நடிக்க நமிதாவை அணுகியிருக்கிறார் டி.ஆர். கதையைக் கேட்டு பிடித்துப் போனதால், உடனே ஓகே சொல்லிவிட்டார் நமிதா. திருமணத்துக்குப் பிறகு நமிதா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்