கலைஞானி கமல்ஹாசனுக்கு இதயத்தில் இருந்து என் நன்றி- மாரி செல்வராஜ்

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (19:49 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

உதயநிதி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  மாமன்னன். இப்படத்தில்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மாமன்னன் படத்தின் ஆடியோ விழாவில் தேவர் மகன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை மாரி செல்வராஜ் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாரி செல்வராஜ் தேவர் மகன் குறித்த கடுமையான விமர்சனத்தையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதுபற்றிய விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்தப் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, இயக்குனர் மாரி செல்வராஜ்  தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி @ikamalhaasan சார் அவர்களுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்