என் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அதில் தன்னுடைய சொந்த வாழ்க்கை, அரசியல், நாட்டு நடப்புகள் பற்றியும் கருத்துகள் கூறுவதுண்டு. இந்நிலையில் அவர் தோசை பற்றி ட்வீட்டியுள்ளார். பிருந்தா கோபால், அனு உங்களை மிஸ் செய்கிறேன். என் தோசை சுப்பு பஞ்சுவை காணவில்லை. சுப்புவை காணவில்லை என்று புகார் அளிக்க வேண்டுமா என்று ட்வீட்டியுள்ளார். குஷ்பு. தயாரிப்பாளரும், நடிகருமான சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடிகை குஷ்புவின் நண்பர். அதனால் தான் அவர் சுப்புவை செல்லமாக தோசை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் யாரோ ஒரு லூசு ராஜா, குமாரை குஷ்பு ட்விட்டரில் வெளுத்து வாங்கியிருந்தார். குஷ்பு இவ்வளவு காட்டமாக லூசு ராஜா யாரை திட்டியிருப்பார் என்று ஆளாளுக்கு ட்விட்டரில் விவாதித்து வருகிறார்கள்.