“என்னது... என் படத்தில் சிம்புவா?” - அதிர்ச்சியில் மோகன் ராஜா

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (11:10 IST)
சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் மோகன் ராஜா.
மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரான பஹத் பாசில் வில்லனாக நடித்த இந்தப் படத்தில், சினேகா, ரோகிணி, பிரகாஷ் ராஜ், சார்லி, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்புவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் மோகன் ராஜா எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவலை மோகன் ராஜா மறுத்துள்ளார். தன்னுடைய அடுத்த படம் பற்றி இன்னும் முடிவு  செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மணிரத்னம் இயக்கவுள்ள மல்ட்டி ஸ்டாரர் படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார் சிம்பு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்