சர்கார் கதைக்கு ஏ.ஆர்.முருகதாஸும் உதவி இயக்குநர் வருணும் உரிமை கொண்டாடி வந்தனர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் இவ்விவகாரத்தில் உண்மைத்தன்மையுடன் செயல்பட்டது .
இந்நிலையில் வழக்கு உயர் நீதிமன்றத்தில் வருணுக்கு சாதகமாக வருவது போல தெரிந்த நிலையில் முருகதாஸ் திரைப்படத்தில் வருண் பெயர் இடம்பெரும் என உறுதிகொடுத்தார். அதன் பிறகு இருதரப்புக்கும் இடையேசமாதானம் ஏற்பட்டு படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டது.
இன்று சர்கார் திரைப்படம் வெளியான நிலையில் முகதாஸ் தான் சொன்னபடியே பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதையின் கருவை யோசித்த வருண் பெயரை இத்திரைப்படத்தில் 30 வினாடிகள் காண்பித்தார்.