விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது தளபதி ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படமாக இருந்தாலும் , பிறருக்கு எந்த விதமான தொந்தரவையும் கொடுக்காமல் கொண்டாடுகிறார்களாம் தளபதி ரசிகர்கள், குறிப்பாக பெண்கள் கூட்டம் தான் தியேட்டரில் அலைமோதுகிறதாம்.
தளபதியின் சர்க்கார் படத்தை பார்ப்பதற்காகவே கேரளாவில் பெண்களுக்கு மட்டும் தனியாக 25 காட்சிகள் அங்கு இருக்கும் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சர்காருக்கு தமிழ் நாட்டில் கூட இப்படி ஒரு வரவேற்பு இருந்திருக்காது. ஆனால் கேரளாவில் மாஸ் கொண்டாட்டம் தான்.