காஜலிடம் திருமணம் குறித்துக் கேட்டால், “இப்போதைக்குத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. சினிமாவில் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். ஆனால், என் பெற்றோர்கள் திருமணத்துக்கு வற்புறுத்துகின்றனர். நல்ல தோழராக, நேர்மையான மனிதராக தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒருவரைக் காணும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்வேன்” என்கிறார்.