தமிழ் - தெலுங்கில் படம் இயக்கியது ஏன்? – ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (12:07 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கியது ஏன் என ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார். 


 

 
மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘ஸ்பைடர்’. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். பரத், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், தமிழ் – தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது.
 
‘மகேஷ் பாபுவுக்காக தெலுங்கில் இயக்கினீர்களா?’ என்று ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்டால், “என்னுடைய பெரும்பாலான படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. எனவே, தெலுங்கில் ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்டேன்.  அதை, தமிழ் – தெலுங்கு என பைலிங்குவலாக பண்ணலாம் என்று தோன்றியது. எனவே, இரண்டு மொழியும் நன்றாகத் தெரிந்த மகேஷ் பாபுவை ஹீரோவாக்கினேன். இந்தப் படக்குழுவில் உள்ள எல்லோருக்குமே இரண்டு மொழியும் தெரியும்” என்றார்.
அடுத்த கட்டுரையில்