பிக்பாஸ் திரைக்கதையில் திடீர் திருப்பம்: ஷாரிக்கை எச்சரிக்கும் மும்தாஜ் வீடியோ

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (09:24 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மும்தாஜ் சக போட்டியாளர்கள் அனைவர் மீதும் கடுப்பாக இருந்தாலும் ஷாரிக்கை மட்டும் அவர் செல்லப்பிள்ளையாக நினைத்து வந்தார். அவர் மீது அதீத அன்பு வைத்திருந்த மும்தாஜ், ஷாரிக்கை தனது மகன் போல் நினைப்பதாக பலமுறை கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் இன்று ஷாரிக்-மும்தாஜ் மோதலை ஏற்படுத்தியுள்ளார் பிக்பாஸ். ஒற்றுமையுடன் ஒருவருடன் ஒருவர் அன்பாக இருக்கும் இருவர் திடீரென சண்டை போட்டால் திருப்பம் ஏற்படும் என்பது பிக்பாஸ் திரைக்கதையின் டுவிஸ்ட்டாக இருக்கலாம். ஆனால் பலமுறை இதுபோன்ற டுவிஸ்ட்டுகளை பார்த்து பார்வையாளர்கள் ஏமாந்துள்ளதால் சற்றுமுன் வெளிவந்த இந்த புரமோ வீடியோ பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை
 
எங்கே தொடு பார்க்கலாம் என மும்தாஜ் ஆத்திரத்துடன் கூற, ஷாரிக் அந்த சவாலை ஏற்று மும்தாஜை தொட, ஷாரிக்கை கடுமையாக மும்தாஜ் எச்சரிப்பது போன்று இன்றைய புரமோ வீடியோவில் உள்ளது. இருப்பினும் இதுவும் ஓவர் ஆக்டிங்காக இருப்பதாகத்தான் சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்