பிக்பாஸ் குரல் செம எரிச்சல் : ஆனந்த் வைத்தியநாதன் பேட்டி

புதன், 11 ஜூலை 2018 (17:11 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசும் பிக்பாஸின் குரல் எரிச்சலாக இருந்தது என அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆனந்த் வைத்தியநாதான் கூறியுள்ளார்.

 
இசையை பின்புலமாகவும், குரல் வளத்தை வளர்த்துக்கொள்வதற்கு பயிற்சி அளித்து வரும் ஆனந்த் வைத்தியநாதன் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆவார்.
 
பிக்பாஸ் வீட்டில் இருந்த வரையிலும் அவர் மிகவும் அமைதியாக மட்டுமே காணப்பட்டார். பொன்னம்பலத்திற்கு பாடுவதற்கு பயிற்சியும் கொடுத்தார். இதனால், ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடித்துப்போனது. எனவே, முதல் வார எலிமினேஷனிலிருந்து அவருக்கு வாக்களித்து அவரை காப்பாற்றினர். ஆனால், மஹதிக்கு பின் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் “அந்த வீட்டில் எல்லோரும் வயதில் மிக சிறியவர்கள். எனவே, நான் அமைதியாக இருந்து விட்டேன். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் கூறிய அறிவுரையிலிருந்து கற்றுக்கொண்டேன். பொன்னம்பலத்திற்கு அருமையான குரல் வளம் இருக்கிறது. பிக்பாஸ் குரல் மிகவும் எரிச்சலாக இருந்தது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்