சிவாவுடன் மோதும் விஷால்... ஒரே நாளில் பட ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (14:38 IST)
சிவகார்த்திகேயனின் டான் படத்துடன் விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் ஒரே தேதியில் வெளியாக உள்ளது. 

 
சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிய இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
இதே போல நடிகர் விஷால் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள்
 
இந்நிலையில், இந்த ஒரு படங்களும் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்