பிரபல நடிகர் மீது ‘கோடிக் கணக்கில்’ மோசடி புகார் ! கோலிவுட்டில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (17:11 IST)
பிரபல முன்னணி நடிகரும் மறைந்த நடிகர் முரளியின் மகனுமான அதர்வா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் ரூ. 6 கோடி மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிபாளர் மற்றிம் விநியோகஸ்தருமான மதியழகன்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
 
அதில், ’செம போத ஆகாதே’என்ற படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், எனக்கு ரு. 5. 5கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நஷ்டத்தை ஈடுகட்ட பணம் சம்பளம் பெறாமல் ஒரு படத்தில் நடித்து தருவதாக உறுதி அளித்தார்.ஆனால் சொன்னபடி அவர் நடித்துக்கொடுக்கவில்லை. அதனால் எனக்கு ரூ. 6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதர்வா தரப்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்