மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. இதையடுத்து எம்பூரான் திரைப்படம் மார்ச் மாதம் 28 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில் எம்பூரான் திரைப்படம் அறிவிக்கப்பட்ட தேதியில் ரிலீஸாகாது என சொல்லப்பட்டது. ஏனென்றால் படத்தைத் தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆஷிர்வாத் சினிமாஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் அதனால் வியாபாரங்கள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது எம்பூரான் படத்தில் இருந்தே லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முழுவதுமே வெளியேறிவிட்டதாம். புதிய ஒப்பந்தத்தின் படி கோகுலம் பிலிம்ஸ் கோபாலன் விநியோகஸ்தராகப் படத்தில் இணைந்துள்ளாராம். அதனால் அறிவிக்கப்பட்ட தேதியில் எம்பூரான் படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.