கோடி கோடியா கொட்டி கேவலமா படம் எடுக்குறாங்க! கேட்க ஆள் இல்லை! – நடிகர் போஸ் வெங்கட் வேதனை!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (10:02 IST)
சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் ஏராளமாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில் அந்த படங்களின் தரம் குறித்து இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட் கேள்வி எழுப்பியுள்ளார்.



தமிழில் மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் கோ, கவண் என பல படங்களிலும் நடித்து வரும் போஸ் வெங்கட் சில படங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக சிறிய பட்ஜெட் படங்கள் நசுக்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்து பேசியுள்ள அவர் “100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என கேட்க ஆள் இல்லை. மக்களுக்கு பிரயோஜனமான தேவையான அவசியமான படங்களை தராமல் தன் கஜானாக்களை மட்டும் நிரப்பும் திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்காமல் பணத்தை கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வரும் தயாரிப்பாளர்களை தடுத்து நிறுத்துவதும், சிறு படங்களை தடுப்பதும் பாசிச மனப்பான்மை.

சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண்ணள்ளி போடுவதற்கு சமம்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்