இப்படம் படம் வெளியாக இன்னும் மூன்று தினங்கள் உள்ளது. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியம் அளிக்காத தடையில்லா சான்றிதழ் காரணமாக கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் தரப்பிலும், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு மத்தியில் படத்தை எப்படியாவது வெளியிட்டு வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவே அனைவரின் எதிர்பார்ப்பு.
ஏற்கனவே மெர்சல் டீசர் அதிக பார்வைகளை பெற்று உலக சாதனை செய்த நிலையில் தற்போது 1 மில்லியன் லைக்ஸ் பெற்று அடுத்த சாதனை பெற்றுள்ளது. இதற்காக ட்விட்டரில் 1M MERSAL WORLD RECORD LIKES, #MersalTeaserHits1MLikes என ஒரு புது Tagகள் ட்ரண்டாகிவருகிறது.