800-100 ரூபாய் வரை 'மெர்சல்' முதல் காட்சி டிக்கெட்! எங்கே போனது அரசு நிர்ணயித்த கட்டணம்

சனி, 14 அக்டோபர் 2017 (10:11 IST)
அரசு நிர்ணயித்த கேளிக்கை வரிக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய திரையுலகினர், திரையரங்க உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை பின்பற்றுவதில்லை என்பது பலகாலமாக நடந்து வரும் நிகழ்வுகள்தான்



 
 
கேளிக்கை வரியை 10%ல் இருந்து 8%ஆக குறைக்க போராடிய திரையுலகினர், பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு ரசிகர்களிடம் பத்து மடங்கு டிக்கெட் கட்டணத்தை வாங்கி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்
 
குறிப்பாக வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை சென்னையின் முக்கிய திரையரங்கு ஒன்றில் தற்போது வசூலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட அதிகம் கொடுக்க வேண்டாம் என்று கூறிய விஷால் இதற்கு என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்