மறுபடியும் சாதனை படைத்த ‘மெர்சல்’

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (13:48 IST)
ரிலீஸாகி 4 மாதங்கள் ஆகப்போகும் நிலையில், புதிது புதிதாக சாதனைகளைப் படைத்து வருகிறது ‘மெர்சல்’. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
 
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலின் லிரிக் வீடியோ, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ரிலீஸானது. இந்த வீடியோ, இதுவரை 4 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல், வீடியோ பாடலும் 2 கோடியே 19 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்