மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ''காட்பாதர் ''பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (14:51 IST)
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் காட்பாதர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.  இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியது.

எனவே  மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படம் தெலுங்கில் ‘’காட்பாதர்’என்ற பெயரில் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இப்படத்தில் சல்மான் கான் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஜூலை 4 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், படக்குழுவினர் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 21 ஆம் ஆதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என கூறி ஒரு புதிய போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளது. இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்