இன்று திரையரங்குகளில் 4 தமிழ் படங்கள் ஒன்றாக ரிலீஸாகியுள்ள நிலையில் அந்த படங்களை குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸால் கடந்த வாரம் முக்கியமான படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் இன்று ஃபர்ஹானா, ராவண கோட்டம், கஸ்டடி, குட் நைட் உள்ளிட்ட 4 தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன.
குட் நைட்:
தமிழில் அறிமுக நடிகராக கலக்கி வரும் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள படம் குட்நைட். ஒரு மிடில் க்ளாஸ் மாத சம்பளம் வாங்கும் சாதாரண இளைஞர் தனது திடீர் தூக்கம் மற்றும் தாக்க முடியாத குறட்டை சத்தத்தால் படும் அவதிகள்தான் படம். முழுக்க காமெடியாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். நகைச்சுவையான படத்தை பார்த்து வார இறுதியை கொண்டாட சிறந்த படம்.
கஸ்டடி:
தமிழ் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்து இரு மொழிகளிலும் வெளியாகியுள்ள படம் கஸ்டடி. போலீஸ் ஆபிசராக நடித்துள்ள நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். வெங்கட் பிரபு என்றாலே நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த மசாலா படங்கள்தான். பெரும்பாலும் இளைஞர்களின் தேர்வாக இந்த படம் இருக்கும்.
ஃபர்ஹானா:
சமீப காலமாக புர்கா, தி கேரளா ஸ்டோரி போன்ற இஸ்லாமியர்களை மையப்படுத்திய படங்கள் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. இந்த நிலையில்தான் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா படம் இன்று வெளியாகிறது.
வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண் ஒருவர் சமூகத்திலும், வீட்டிலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதை அவர் எப்படி சமாளித்து முன்னேறுகிறார் என்பதும்தான் கதை.
ராவண கோட்டம்:
மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடித்துள்ள படம் ராவண கோட்டம். முழுவதும் கிராமம் சார்ந்த கதையாக சமூக அவலங்கள் குறித்து பேசியுள்ள இந்த படம் கிராமம் சார்ந்த படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல தேர்வாக அமையும்.