வலிமையை பின்னால் தள்ளிய மாஸ்டர்! – அதிகம் ட்ரெண்டான டாப் 10 படங்கள்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (10:50 IST)
2020ம் ஆண்டு முடிய உள்ள நிலையில் இந்த ஆண்டில் அதிகம் ட்ரெண்டான படங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது ட்விட்டர்.

2020ம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழைந்துள்ள நிலையில் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டான அதிகம் பேசப்பட்டவை குறித்த பட்டியலை ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய படங்களின் பட்டியலை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

அதில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படமாக முதல் இடத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக வக்கீல் சாஹெப் படமும், மூன்றாவது இடத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படமும் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான சூரரை போற்று 5ம் இடத்தை பிடித்துள்ள நிலையில், கேஜிஎஃப் அத்தியாயம் 2 திரைப்படம் 9வது இடத்தையும், ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் 10வது இடத்தையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்