ஆரிக்கு இப்படி ஒரு மாஸ்ஸா? ஆச்சரியம் அடைந்த கமல்ஹாசன்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (17:46 IST)
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரிக்கு எந்த அளவுக்கு மாஸ் இருக்கிறது என்பது வெளியே உள்ளவர்களுக்கு தெரியும். ஆனால் உள்ளே உள்ளவர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் ஆரியிடம் மீண்டும் மீண்டும் சண்டை போட்டு வருகின்றனர் 
 
குறிப்பாக கமல்ஹாசனுக்கு ஆரிக்கு வெளியே உள்ள மதிப்பு தெரிந்ததால்தான் அவரிடம் சாஃப்டாக நடந்து கொள்கிறார் என்பதும் அவர் தவறு செய்தாலும் அதனை அவர் மென்மையாக கண்டிக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் சேலம் பகுதியில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென ஒரு கும்பல் ஆரி ஆரி என கோஷம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
ஆரிக்கு இப்படி ஒரு மாஸ்ஸா? என ஆச்சரியமடைந்த கமல், ஆரி ரசிகர்களை நோக்கி கை காட்டும் காட்சியும் அந்த விடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்