பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி கைது குறித்து கமல்ஹாசன் டுவீட்

புதன், 6 ஜனவரி 2021 (17:14 IST)
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி கைது குறித்து கமல்ஹாசன் டுவீட்
பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இது குறித்த வழக்கில் ஏற்கனவே 5 பேர்களை சிபிஐ போலீசார் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில் இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும், அதில் ஒருவர் அதிமுக நிர்வாகி என்ற செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். குற்றவாளிகள் ஒருவர் கூட தண்டனை அனுபவிக்காமல் விடக்கூடாது என்று முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்