எஸ்.ஜே.சூர்யா ஆக்டிங் வேற லெவல்.. அந்த சிலுக்கு சீன்..? – மார்க் ஆண்டனி Twitter X ரியாக்‌ஷன்!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:51 IST)
விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து இன்று வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. டைம் ட்ராவலை மையப்படுத்திய கேங்ஸ்டர் காமெடி படமாக இது உருவாகியுள்ளது. விஷாலுக்கு முன்னதாக தொடர்ந்து பல படங்கள் நன்றாக ஓடாமல் இருந்ததால் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.

ஆனால் சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லர் இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படமும் அமைந்துள்ளதாக காலை முதலாக ஆடியன்ஸின் ரியாக்சன் மூலமாக தெரிய வருகிறது.

பலரும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை புகழ்ந்து வருகின்றனர். விஷாலும் தரமான நடிப்பை வழங்கியுள்ளதோடு க்ளைமேக்ஸில் செமையான கெட்டப்பில் வந்து அசத்தியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் சிலுக்கு ஸ்மிதா காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்