விஜய்க்கு நன்றி… அஜித்துக்கு பில்ட் அப் – மார்க் ஆண்டனி படத்தில் ரசிகர்களைக் கவர இயக்குனரின் திட்டம்!

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:24 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று பேன் இந்தியன் ரிலீஸாக வெளியாகிறது.

இன்று படம் ரிலீஸான நிலையில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் பார்க்க வந்த அஜித் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த படத்துக்குள் சில நகாசு வேலைகளை செய்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

படத்தின் தொடக்கத்திலேயே விஜய்க்கு நன்றி தெரிவித்து விஜய் ரசிகர்களை கோஷம் போட வைத்த இயக்குனர், படத்துக்குள் அஜித் பற்றிய வசனம் ஒன்றை வைத்தும் உள்ளார். படம் 90 களின் காலகட்டத்தில் நடக்கும் பகுதியில் இடம்பெறும் வசனத்தில் “யாரு அந்த ஹீரோ?” என ஒரு கதாபாத்திரம் கேட்க, மற்றொரு கதாபாத்திரம் யோசித்து ”யாரோ அஜித்தாம்” என சொல்ல, பதிலுக்கு ஒருவர் “இப்ப நீ யோசிச்சு சொல்லும் இந்த பேரதான் ஒருநாள் உலகம் யோசிக்காமலேயே சொல்லப் போகுது” எனக் கூறுவது போல வைத்துள்ளனர். இதனால் படம் பார்க்க வந்த அஜித் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்