ஒரு படைப்பாளியாக என்னால் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை… மாரி செல்வராஜ் ஆதங்கம்!

vinoth
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:38 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.

சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இந்த படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் பேசும்போது “ஏராளமான வன்முறைப் படங்கள் வருகின்றன. அவையெல்லாம் திரை அனுபவமாக மட்டும் பார்க்கப்படுகிறது. அதே சமயம் நிஜ வாழ்க்கையில் நடக்கும் வன்முறையைக் காட்டும்போது அதற்கான முக்கியத்துவத்தைதான் கோருகிறோம்.  ஆனால் அந்த வன்முறை மிகப்பெரிய வன்முறையாக பேசப்படுகிறது. எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும்போது, அவர்களின் கோபத்தைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.  அதை சமூகத்துக்கு எதிரானதாக மாற்ற முயற்சி செய்யும் போது, ஒரு படைப்பாளியாக என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்