தமிழ்நாட்டைப் புரிந்துகொள்ள ‘வாழை’ படம் பார்க்க வேண்டும்… மிஷ்கின் நெகிழ்ச்சி!

vinoth

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (13:42 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம், மாரி செல்வராஜ் தான் சிறுவயதில் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் “உலகின் புகழ்பெற்ற இயக்குனரான ராபர்ட் பிரஸ்ஸான், ‘இந்தியாவை புரிந்துகொள்ள சத்யஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி பார்க்கவேண்டும் என்பார். அதுபோல தமிழ்நாட்டைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ‘வாழை’ப் பார்க்கவேண்டும். ஒரு குழந்தைக்கு அவன் அம்மா மற்றும் சகோதரிகள் இல்லாமல் கிடைக்கும் முதல் சொந்தமில்லாத சொந்தம் அவனுடைய் டீச்சர்தான். அவர்களுக்குள் இருக்கும் அன்பை மிக அழகாக காட்டியுள்ளார் மாரி செல்வராஜ்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்