மம்முட்டி ஜோடியாகும் ஆண்ட்ரியா, அஞ்சலி

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (14:46 IST)
தரமணி படத்தை இயக்கிவரும் ராம் அடுத்து மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
 
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 
ராம் தற்போது இயக்கிவரும் தரமணி படத்தில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்து வருகிறார். கற்றது தமிழ் மூலம் அஞ்சலியை தமிழுக்கு அழைத்து வந்தவரும் ராம்தான் என்பது முக்கியமானது. இவர்கள் இணைந்து நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. யுவன் இசையமைக்கிறார்.